tamilnadu

img

ஹவுரா சொமாட்டோ தொழிலாளர் போராட்ட பின்னணியில் பாஜக!

கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்றுவரும் ‘சொமாட்டோ’ ஊழியர்களின் போராட்டப் பின்னணியில் பாஜக இருப்பதை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.இதுகுறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு, சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஹவுரா சொமாட்டோ ஊழியர்கள் போராட்டத்தைத் துவங்கிய முதல் நாளில் ஹவுராவைச் சேர்ந்த பாஜக தலைவர் சஞ்சீவ் குமார் சுக்லா முழுமையாக கலந்து கொண்டார். பின்னர்அவர் காணாமல் போனார். போராட்டத் தில் பாஜகவின் தூண்டுதல் அம்பலமாகி விடும் என்பதால், அவர் திடீரெனபின்வாங்கினார்.ஆனால், போராட்டத்தை முன் னின்று நடத்தும் பஜ்ரங் நாத் வர்மாவே,அப்பட்டமான பாஜக-காரர்தான் என்பதுதற்போது தெரியவந்துள்ளது. பஜ்ரங்நாத் வர்மா, கடந்த 14 மாதங்களாக ‘சொமாட்டோ’ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால், அதற்கு முன்பிருந்தே தீவிரமான பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. இந்தபோராட்டத்தில் பாஜக பங்கு எதுவும் இல்லை என்று, வர்மாவும், சுக்லாவும் மறுத்தாலும், அது உண்மையல்ல என்றுமேற்குவங்க ஊடகங்கள் கூறுகின்றன. 

“உணவிற்கு மதங்கள் இல்லை” என்றும், “உணவே ஒரு மதம்” என்றும்அண்மையில் இந்துத்துவா பேர்வழி ஒருவருக்கு ‘சொமாட்டோ’ நிறுவனம் பதிலடி கொடுத்திருந்தது. இதையடுத்தே, சொமாட்டோ நிறுவனமானது, இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் மாட்டிறைச்சி உணவை யும் (பீப்), இஸ்லாமிய ஊழியர்களிடம் பன்றியிறைச்சி உணவையும் (போர்க்)கட்டாயப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து அனுப்புவதாக பாஜக-வினர் போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹவுராசொமாட்டோ ஊழியர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கையையும் அவர்கள் சாமர்த்தியமாக பின்னுக்குத் தள்ளிவிட் டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

;